தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

18th December 2024

இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பதிரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2024 டிசம்பர் 11 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.