54 வது காலாட் படைப்பிரிவினால் நத்தார் கரோல் கீதங்கள் – 2024

20th December 2024

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ ராஜபக்‌ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மன்னார் நத்தார் கரோல் கீதங்கள் – 2024 நிகழ்ச்சியை 19 டிசம்பர் 2024 அன்று நடத்தினர். மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில், கட்டளைக்கு உட்பட்ட பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் உதவியுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட கரோல் கீதங்கள், இராணுவப் பாடகர் குழு, புனித சவேரியார் பெண்கள் கல்லூரி, அடம்பன் மத்திய கல்லூரி, முருக்கன் மத்திய கல்லூரி, மற்றும் வெற்றி மாதா தேவாலயத்தின் பாடகர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கிய சமாதான செய்தியை உணர்த்தியது.

கலந்துகொண்ட அனைவருக்கும் வானவேடிக்கை கண்காட்சி மற்றும் சிற்றுண்டி வழங்கலுடன் நிகழ்வு நிறைவுற்றது. இந்நிகழ்வில் மதகுருமார்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.