செவனப்பிட்டிய மாணவர்களின் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் பயணத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆதரவு
16th December 2024
செவனப்பிட்டிய மகா வித்தியாலய மாணவி எம்.இனோஷா நவோத்யா, 17 வயதுக்குட்பட்ட, 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தேசிய வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, 2024 ஆண்டு கத்தார் தோஹாவில் 2024 டிசம்பர் 19 - வரை நடைபெறும் ஆசிய இளையோர் மற்றும் கனிஷ்ட பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
இருப்பினும், தேவையான உபகரணங்களைப் பெறுவதிலும் தயார்படுத்துவதிலும், எதிர்கொண்டுள்ள சவால்களை கருத்தில் கொண்டு செவனப்பிட்டிய மகா வித்யாலய அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அன்பளிப்பாக ரூபா எண்பதாயிரம் வழங்கினார். இந்த நன்கொடை விழா 13 டிசம்பர் 2024 அன்று கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், செவனப்பிட்டிய மகா வித்தியாலய அதிபர், செவனப்பிட்டிய பளுதூக்கும் நிலையத்தின் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.