இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத்தளபதி 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு விஜயம்

20th December 2024

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 டிசம்பர் 18 அன்று 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈஎம்எச்சீ டி சேரம் பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார்.

விஜயத்தின் போது, அவர் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி கட்டளை அதிகாரியிடமிருந்து விரிவான விளக்கத்தைப் பெற்றார். பின்னர் முகாம் வளாகத்தை ஆய்வு செய்த அவர் , படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்தார். செல்வதற்கு முன், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் அவர் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.