6th January 2025
2025 ஜனவரி 3 ம் திகதி பொல்கஹவெல புனித பெர்னாடெட்ஸ் மாதிரிப் பாடசாலையில் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
படைப்பிரிவின் தளபதி அதிபருடன் சேர்ந்து, புதிய மாணவ தலைவர்களுக்கு முறைப்படி சின்னங்களை சூட்டினார். தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும், இந்த ஆரம்ப நடவடிக்கை மாணவர்களை எதிர்கால தேசியத் தலைவர்களாக ஆக்குவதற்கு எவ்வாறு வழிகாட்டும் என்பதையும் வலியுறுத்தி, நிகழ்வில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.