இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 35வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தனது 35வது ஆண்டு நிறைவை 2025 நவம்பர் 01 அன்று குருநாகல் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.

இந்த கொண்டாட்டங்கள் 2025 ஒக்டோபர் 29, அன்று படையணி போர் வீரர்கள் நினைவுதூபியில் ஆரம்பிக்கப்பட்டதுடன், 82 வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்த நாள் குருநாகல் இந்து கோவில், மலே ஜும்மா மசூதி மற்றும் பற்றிமா அன்னை தேவாலயம் ஆகியவற்றில் மத அனுஷ்டானங்கள் மற்றும் கொடி ஆசிர்வாதமும் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கலும் இடம்பெற்றன.

ஆண்டு நிறைவு நாளில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் குழு படம் எடுத்துக் கொண்டதுடன் அனைத்து நிலையினருடன் மதிய உணவிலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.