7th December 2025
11 வது காலாட் படைப்பிரிவினால், வெளிச்செல்லும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ. குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வை 2025 டிசம்பர் 05 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில் தளபதி, படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், படைத்தளபதி படையினரிக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தின் போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடினார்.
2025 டிசம்பர் 06 அன்று பிரியாவிடை நிகழ்வுகள் தொடர்ந்துடன் இதன் போது 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.