9th December 2025
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக, ஜெர்மன் கூட்டமைப்பு ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஐக்கிய நாடுகளின் நடமாடும் பயிற்சிக் குழு, 2025 டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டது.
இந்தக் குழுவிற்கு, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி தலைமை தாங்கினார். தலைமை பயிற்றுவிப்பாளர், நிறுவனத்தின் பங்கு மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் வரவேற்பு உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் நடமாடும் பயிற்சி குழுவுடன், முன்னேற்றம் மற்றும் நடந்து வரும் அமைதி காக்கும் பயிற்சியின் மதிப்பாய்வு குறித்து ஒரு பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.
நடமாடும் பயிற்சி குழு, ஒரு போர் கள போக்குவரத்து கண்காட்சியிணையும் அவதானித்ததுடன் நிறுவனத்தின் தற்போதைய பயிற்சி வசதிகள் மற்றும் பயிற்சி பிரதேசங்களை பார்வையிட்டது மேலும் நடைமுறைகள் மற்றும் கட்டமைப்பு குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட்டது.