மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் 41 வது ஆண்டு நிறைவு விழா

மாதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலை, அதன் 41 வது ஆண்டு நிறைவு விழாவை 2026 ஜனவரி 14 ஆம் திகதி இராணுவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற தொடர்ச்சியான சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு நாளில், இராணுவ பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எல்.ஐ. கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இரவு முழுவதும் பிரித் பாராயணம் அதனைத் தொடர்ந்து தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலையின் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.