இலங்கை சிங்க படையணி தனது 69வது ஆண்டு நிறைவை 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி கொண்டாடியது.
இராணுவ சிறப்பம்சம்

76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் தொடர்ச்சியான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது.
பிரிகேடியர் கே.எம்.ஏ.டபிள்யூ.கே. பெரேரா ஏஏடிஓ அவர்கள், 2025 செப்டம்பர் 25 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான விழாவில், போர் கருவி பணிப்பக பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.

3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி 2025 செப்டம்பர் 17 அன்று கந்தகாடு இராணுவப் பண்ணையில் ஒரு புதிய பால் பதப்படுத்தல் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உடனடி உணவு தயாரிப்பு தொழிற்சாலையைக் நிர்மாணித்தது.

பலாலி இராணுவத் தள மருத்துவமனை, யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 20 அன்று இரத்த தான நிகழ்ச்சியை நடத்தியது.

இந்திய இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.எஸ். ராமன் பீவீஎஸ்எம் ஏவீஎஸ்எம் வைஎஸ்எம் அவர்களுடனான இந்திய தூதுக்குழு 2025 செப்டம்பர் 19 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதிமேதகு ஜூலி சுங், 2025 செப்டம்பர் 19 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
12 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்ட்பிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசீஎம்ஜீஎஸ்டி குரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 12 ம் திகதி கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த போர்வீரர் நினைவஞ்சலி மற்றும் மாணவச் சிப்பாய் தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கை சமிக்ஞை படையணியில் "மின்னணு பாதுகாத்தல்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 12 அன்று பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணியில் அதிகாரிகள் உணவகத்தில் 9வது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 2வது சமிக்ஞை பிரிகேட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்த சைபர் பாதுகாப்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான விரிவுரை நடாத்தப்பட்டது.