சிவில் பணிகள்
14 வது கஜபா படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

கோண்டாவில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் 2024 ஆகஸ்ட் 26 அன்று மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
சரண பார்வையற்றோர்களின் முதியோர் இல்லம் புனரமைப்பு
.jpg)
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் அம்பலாந்தோட்டை தெஹிகஹலந்த சரண பார்வையற்றோர்களின் முதியோர் இல்லத்தின் கட்டிடம் புனரமைக்கப்பட்டது.
12 வது காலாட் படைப்பிரிவு படையினரால் சிரமதான பணி

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 13 ஆகஸ்ட் 2024 அன்று வெடிஹிடி கந்த விகாரையில் இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி ஒரு சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
22 வது காலாட் படைப்பிரிவினால் ஆனந்த விகாரை தர்ம பாடசாலையில் தொண்டு நிகழ்வு

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 6 வது இலங்கை கவச வாகன படையணியினால் 11 ஆகஸ்ட் 2024 அன்று கல்கடவல ஆனந்த விஹாரை தர்ம பாடசாலையில் பிள்ளைகளுக்கு மதிய உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன.
பூநகரின் புனித மேரி தேவாலயத்தின் புதிய அல்தார் ஆடைகள் வழங்கல்

552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சிடி வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒருங்கிணைப்புடன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூநகரின் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவர்களுக்கு ஆறு புதிய அல்தார் சிறுவர் ஆடைகள் விநியோகிக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் செவனப்பிட்டிய நெலும்வெவ உயர்தரப் பாடசாலையில் மாணவ தலைவர் சின்னம் வழங்கல்

செவனபிட்டிய நெலும்வெவ உயர்தரப் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக திட்ட அதிகாரியான பிரிகேடியர் எல்.எச்.எம்.ராஜபக்ஷ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 09 ஆகஸ்ட் 2024 அன்று தலைமை விருந்தினராகப் கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியின் சார்பாக மாணவர்களுக்கான மாணவ தலைவர் சின்னங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
பெல்லன்வில ரஜமஹா விகாரையில் 74வது எசல மகா பெரஹெர விழாவை முன்னிட்டு சிரமதான பணி

142 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய பெல்லன்வில ரஜமஹா விகாரையின் மைதான விஸ்தரிப்பு பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான சிரமதான பணி 24 ஜூலை 2024 ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 6 வரை பிரிகேட் படையினரால் முன்னெடுக்கப்பட்டது. இம் முயற்சி 74 வது எசல மகா பெரஹெரா திருவிழாவிற்கு தயாராகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் மாறன் பாலர் பாடசாலை சிறார்களுக்கு மதிய உணவு

10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் 31 ஜூலை 2024 அன்று கொள்ளவிலான்குளம் மாறன் பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்ப ட்டது.
56 வது காலாட் படைப்பிரிவில் பாதுகாப்பு கருத்தரங்கு

விசேட அதிரடி படையினரால் வனத்துறை, தொல்லியல் துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து 56 வது காலாட் படைப்பிரிவின் மாநாட்டு மண்டபத்தில் 30 ஜூலை 2024 அன்று பாதுகாப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் தொல்லியல் தளங்களை சிறப்பாகப் பாதுகாத்தல், காடுகளைப் பாதுகாத்தல், வனவிலங்குகளை நிர்வகித்தல் மற்றும் அது தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இந்த நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
221 வது காலாட் பிரிகேடினால் நன்கொடை வழங்கல்

221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீ ரத்நாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 221 வது காலாட் பிரிகேட் படையினர் புல்மோட்டை கனிஜவெளி சிங்களப் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.