221 வது காலாட் பிரிகேடினால் நன்கொடை வழங்கல்

4th August 2024

221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீ ரத்நாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 221 வது காலாட் பிரிகேட் படையினர் புல்மோட்டை கனிஜவெளி சிங்களப் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்வின் போது புல்மோட்டை கனிஜவெளி சிங்களப் பாடசாலை மற்றும் புல்முடை சாகரபுர பாடசாலையைச் சேர்ந்த 64 மாணவர்கள் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளை பெற்றுக்கொண்டனர். இந்த முயற்சிக்கான நிதியுதவியை திரு.கஜேந்திர லியனகே மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்த "பிரண்ட்ஸ் லைப் சொசைட்டி" உறுப்பினர்கள் வழங்கினர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.