சிவில் பணிகள்

Clear

விஷேட படையணி படையினரால் கொஹொலன்வலையில் புதிய பஸ் தரிப்பிடம்

2024-10-10

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 09 ஒக்டோபர் 2024 அன்று ஏ9 வீதிக்கு அருகில் உள்ள கொஹொலன்வலை பகுதியில் பேருந்து தரிப்பிடத்தினை நிர்மாணிக்கும் பணியை விஷேட படையணி தலைமையக படையினர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.


75 வது இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு 11 வது காலாட் படைப்பிரிவு படையினரால் சிரமதானம்

2024-10-10

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினர் துப்புரவு திட்டங்களை மேற்கொண்டனர்.


விருகெகுலு பாலர் பாடசாலையில் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

2024-10-10

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு “பிள்ளைகளை பாதுகாப்போம் – சமமாக நடத்துவோம்” எனும் தொனிப்பொருளில் பனாகொடை விருகெகுலு பாலர் பாடசாலையின் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வு 2024 ஒக்டோபர் 1ம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரி திருமதி சுரங்கி அமரபால மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.


512 வது காலாட் பிரிகேட் ஏற்பாட்டில் கடற்கரை சுத்தம்

2024-10-09

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 512 வது காலாட் பிரிகேட்டினரால் 2024 ஒக்டோபர் 4 ம் திகதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.


விசேட படையணியினரால் சிரமதான பணி

2024-10-09

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 07 ஒக்டோபர் 2024 அன்று மாத்தளையில் உள்ள பௌத்த பெண்கள் சிறுவர் மேம்பாட்டு நிலையத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.


024 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 20 வது கஜபா படையணியினால் சிறுவர்களுக்கு உதவி

2024-10-06

2024 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், கஜபா படையணியின் 20வது படையலகு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்த தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி பரணமதவாச்சிய வித்தியாலயத்தில் 77 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் சமூக நலன்புரி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.


12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

2024-10-03

12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் சின்னவளையன்கட்டு பிரதெசத்தின் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்காக புதிய வீட்டை நிர்மாணித்தனர். 02 ஒக்டோபர் 2024 அன்று 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் இந்த வீடு உத்தயோகபூர்வமாக பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.


12 வது காலாட் படைப்பிரிவினரால் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

2024-10-03

2024 ஒக்டோபர் 01ம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, களுத்துறை வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தின் (ஆஸ்திரேலியக் கிளை) அனுசரணையுடன், மேஜர் பி.ஏ.ஜே புஷ்பகுமார ஆர்எஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பில் 12 வது காலாட் படைப்பிரிவினால் ஹெலகம ஆரம்பப் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கவச வாகனப் படையணியினால் சிரமதான பணி

2024-10-02

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை கவச வாகனப் படையணி 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி வத்தளை பிரிதிபுர இல்லத்தில் சிரமதான பணியை மேற்கொண்டது. மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேநீர் வழங்கப்பட்டதுடன், இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.


241 வது காலாட் பிரிகேட் ஒருங்கமைப்பில் கடற்கரையில் சிரமதான பணி

2024-09-30

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், 241 வது காலாட் பிரிகேட் 2024 செப்டெம்பர் 28 அன்று அக்கரைப்பற்று பாலமுனை கடற்கரை பூங்காவில் சிரமதான பணியை மேற்கொண்டது.