சிவில் பணிகள்
பலாலி இராணுவ தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து பலாலி இராணுவ ஆதார வைத்தியசாலையினால் 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைப்பெற்றது.
மத்திய பாதுகாப்பு படையினரால் தியத்தலாவை, மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையில் சிரமதானம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 27 செப்டம்பர் 2024 அன்று தியத்தலாவை, மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹியங்கனை ரஜமகா விகாரை ஊர்வலத்திற்கு 11 வது காலாட் படைப்பிரிவு படையினர் உதவி

மஹியங்கனை ரஜமகா விகாரையின் வருடாந்த ஊர்வலம் 17 செப்டம்பர் 2024 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படையினர் சமய நிகழ்வினை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினர்.
இலங்கை ரைபில் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணியினால் சமூக உதவித் திட்டம்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கை ரைபில் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணி ஆகியவற்றின் தலைமையகங்களினால் 6 செப்டம்பர் 2024 அன்று சமூக உதவித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
20 வது இலங்கை சிங்க படையணியினால் சிரமதானப் பணி ஏற்பாடு

20 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் 12 செப்டம்பர் 2024 அன்று டோசர் லேக் சந்தியிலிருந்து கோதமீகம வரையிலான கால்வாய் மற்றும் பாதையை சுத்தப்படுத்தும் நோக்கில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
மதுரகட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பாதுகாப்பிற்கு 18 வது கெமுனு ஹேவா படையணியினரால் கம்பி வேலி

18 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 செப்டம்பர் 07 அன்று மதுரகட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு கம்பி வேலியை அமைத்தனர். இந்த முயற்சியானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 18 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டிஎகே பலிஹேன அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
11 வது விஜயபாகு காலாட் படையணியினால் மகாவலி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு உதவி

11 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 28 ஆகஸ்ட் 2024 அன்று கரணவாய், மகாவலி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு விசேட மதிய உணவை வழங்கினர்.
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி இளம்பிறை பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கல்

10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் 29 ஆகஸ்ட் 2024 அன்று வத்திராயன், இளம்பிறை பாலர் பாடசாலை, பிள்ளைகளுக்கு போஷாக்கான மதிய உணவை வழங்கினர்.
4 வது கெமுனு ஹேவா படையணியினரால் அய்யத்துமலை தேவாயலத்தில் சிரமதான பணி

4 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.பீ.ஐ.எச்சேனநாயக்க பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது கெமுனு ஹேவா படையணி படையினர் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் 25 அன்று அய்யத்துமலை தூய சகாய தேவாலயத்தில் சிரமதானதை மேற்கொண்டனர்.
18 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணி

241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 25 ஆகஸ்ட் 2024 அன்று கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.