14 வது கஜபா படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

27th August 2024

கோண்டாவில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் 2024 ஆகஸ்ட் 26 அன்று மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

இவ் வீடு 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏஏஆர் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 14 வது கஜபா படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு திரு. ராஜ்குமார் மற்றும் அவரது தோழர்கள் நிதியுதவி வழங்கினர்.

இந் நிகழ்வில் பிரதேசத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.