சிவில் பணிகள்
9 வது இலங்கை சிங்க படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 9 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 9 வது இலங்கை சிங்க படையணி யட்டியானவில் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீட்டை நிர்மாணித்தது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியினால் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீடு திறப்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 23 ஒக்டோபர் 2024 அன்று மாத்தறை, துடாவவில் ஒரு குடும்பத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டைக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பம்பைமடுவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 19ம் திகதி அன்று பம்பைமடுவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துள்ளர்.
22 வது காலாட் படைப்பிரிவினால் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி 2024 ஒக்டோபர் 17 தொடக்கம் 19ம் திகதி வரை 22 வது காலாட் படைப்பிரிவில் நடைபெற்றது.
11 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் கலல்பிட்டியவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தியல் முன் முயற்சியால் 11 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 1 வது இலங்கை ரைபிள் படையணியின் படையினர் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 19 ஆம் திகதி மாத்தளை கலல்பிட்டியவில் வசிக்கு தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தினால் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையில் ‘கட்டின’ பூஜை நிகழ்வு

காங்கேசன்துறை வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாரம்பரிய 'கட்டின பூஜை' 2024 ஒக்டோபர் 18 மற்றும் 19ம் திகதிகளில் விகாரையின் பிரதமகுரு வண.ஜிந்தோட்ட நந்தராம தேரரின் தலைமையில் பல சமய அனுஷ்டானங்களுடன் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
212 வது காலாட் பிரிகேடினால் பாடசாலை மாணவர்களுக்கு மூக்குகண்ணாடி வழங்கல்

23 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 23 வது கெமுனு ஹேவா படையணி படையினரின் ஏற்பாட்டில் 2024 ஒக்டோபர் 10 ம் திகதியன்று விநாயகர் பாலர் பாடசாலையின் 18 சிறார்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது, இந்த திட்டம் 23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்ஜீடிஜே ஹபுருகல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
57 வது காலாட் படைப்பிரிவினால் மரம் நடுகை திட்டம்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 57 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனசெத நிறுவனத்தைச் சேர்ந்த வண. துசித பிரியங்க பேராயர் மற்றும் குழுவினரின் உதவியுடன் மர நடுகை திட்டத்தினை 57 வது காலாட் படைப்பிரிவு முன்னெடுத்தது. 08 ஒக்டோபர் 2024 அன்று பாங்கொல்ல முகாமில் நடைபெற்ற நிகழ்வின் போது 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
11 வது காலாட் படைப்பிரிவு படையினரின் பங்கேற்புடன் இரத்த தானம்

12 ஒக்டோபர் 2024 அன்று சில்வர் கிராஸ் மருத்து நிலையத்தில் திகன சமூக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்ச்சியில் 11 வது காலாட் படைப்பிரிவு படையினர் கலந்துகொண்டனர்.