சிவில் பணிகள்

Clear

2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியினரால் துலான ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் விழுந்த மரம் அகற்றல்

2024-12-18

பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ரம்பேவ, துலானா ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் அரச மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், விகாரை வளாகத்தின் கட்டிடம் ஒன்றுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. ரம்பேவ பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் 17 டிசம்பர் 2024 அன்று விழுந்த மரத்தை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தினர்.


3 வது (தொ) இலங்கை சிங்க படையணியினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

2024-12-18

ஹங்குரன்கெத்த, மந்தாரம் நுவர பகுதியில் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் பிரதேச அனுசரனையாளர்களின் அனுசரணையுடன் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டது.


11 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் நன்கொடை வழங்கல்

2024-12-05

11 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் மனுசத் தெரண மற்றும் பாலடிவத்த டயலோக் நிறுவனத்துடன் இணைந்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை 1 டிசம்பர் 2024 அன்று வெல்லாவெளி பிரதேச செயலக அலுவலகத்தில் நடாத்தியது.


சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 56 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவினரால் மனிதாபிமான உதவி

2024-12-04

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வவுனியா மாவட்டத்தில் 29 நவம்பர் 2024 அன்று சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதற்காக மனிதாபிமான உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு மனுசத் தெரண மற்றும் அனுசரனையாளரான திரு.மகேஷ் ஜயவர்தன ஆகியோர் அனுசரணை வழங்கினர்.


12 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் கொடவாய களப்பு அரிப்பு தடுப்பு

2024-12-01

ஹம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழுவுடன் 12 வது காலாட் படைபிரிவின் படையினர் இணைந்து 2024 நவம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் அம்பலாந்தோட்டையில் உள்ள கொடவாய களப்பின் அரிப்பைத் தடுத்தனர்.


இராணுவ படையினரால் வஹல்கடா குளத்தின் உடைந்த கால்வாய் மீளமைப்பு

2024-11-27

27 நவம்பர் 2024 அன்று பெய்த கனமழையால் அனுராதபுரத்தில் உள்ள வாஹல்கடா குளத்தின் டி-4 கால்வாய் கட்டு இடிந்து வீழ்ந்ததன் காரணமாக வஹல்கடா டி-4 கிராம மக்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது.


5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் உதிஸ்பத்துவவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கான புதிய வீடு

2024-11-14

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் உதிஸ்பத்துவவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.


10 வது கஜபா படையணியினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

2024-11-14

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது கஜபா படையணி படையினரால் கண்டி, பன்விலவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.


குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம்

2024-11-06

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் பாடசலை மற்றும் சுற்றியுள்ள சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை நோக்கமாக கொண்டு வெற்றிகரமாக நீர் சுத்திகரிக்கும் இயந்திர மட்/கல் குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது.


வட மாகாண நோயாளிகளுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

2024-10-28

யாழ். போதனா வைத்தியசாலை கண் பிரிவு, பலாலி இராணுவத் தள வைத்தியசாலையுடன் இணைந்து 2024 ஒக்டோபர் 14 முதல் 25 வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட கண்புரை சத்திரசிகிச்சை திட்டத்தை நடாத்தியது. வைத்தியர். எம். மலரவன் மற்றும் ஐந்து கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், வட மாகாண கிராமப்புறங்களின் 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச, உயர்தர கண்புரை அறுவை சிகிச்சைகள் இந்த திட்டத்தி ஊடாக மேற்கொள்ளப்பட்டது.