மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பல்
26th August 2024
இந்திய-இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவப் கூட்டு பயிற்சியான மித்ர சக்தி' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியப் படையினர் 25 ஆகஸ்ட் 2024 இலங்கையில் இருந்து நாடு திரும்பினர்.
இம் மாதம் 2024 ஆகஸ்ட் 12 இலங்கை வந்தடைந்த இந்தியப் படையினர் மாதுரு ஓயா பிரதேசத்தில் 12 நாட்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். இப் பயிற்சியில் கோட்பாட்டு விரிவுரைகள் மற்றும் நடைமுறை இராணுவப் பயிற்சிகள் இரண்டிலும் பயங்கரவாத எதிர்ப்பு போர் தந்திரங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாட்டு இராணுவ வீரர்களும் நவீன போர் தந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், மேலும் இரு நாட்டு இராணுவத்தினருக்கு இடையே அறிவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஊடாக அவர்கள் தங்கள் தாய்நாடு திரும்பினர். காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ, 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் மித்ரசக்தி' பயிற்சியின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ உள்ளிட்ட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களை வழியனுப்பினர்.