51 வது காலாட் படைப்பிரிவினால் கிராம மக்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

27th August 2024

51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியுபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 26 ஆகஸ்ட் 2024 அன்று 51 காலாட் படைபிரிவின் சிமிக் பூங்காவில் செல்வபுரம் மற்றும் யோகபுரம் கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

பலாலி இராணுவத் தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி தலைமையிலான மருத்துவக் குழுவினால் இந்த மருத்துவ முகாம் நடாத்தப்பட்டதுடன் மருத்துவக் குழுவினர் பிள்ளைகளுக்கு நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள், பற் சுகாதாரம் மற்றும் தோல் நோய்களை பரிசோதித்தனர். பெற்றோர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது, திரு. ராஜ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் நிதியுதவி செய்தனர்.

தங்களின் சரியான நேரத்தில் தேவைகளை நிவர்த்தி செய்த இராணுவத்தினருக்கு பெற்றோர்களும் பிள்ளைகளும் நன்றி தெரிவித்தனர்.