செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை இராணுவத்தினால் நாடு முழுவதும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான தொடர் நலன்புரி முகாம்
இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில், தொடர்ச்சியான நலன்புரி திட்டங்களின் ஒரு பகுதியாக, ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
‘மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி - 2026’ தொடக்க விழாவில் இராணுவத் தளபதி பங்கேற்பு
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைபெற்ற ‘மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி - 2026’ தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதி மின்னேரிய பீரங்கி வளாகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ 2026 பெப்ரவரி 20 அன்று பீரங்கி பயிற்சி பாடசாலைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்தார்.
இராணுவ தளபதி கூட்டு சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவில் பங்குபற்றல்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 20 அன்று கொத்மலையில் உள்ள கூட்டு சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
‘சமனலசிறி ஹரித வந்தனா’ தேசிய திட்டத்திற்கு இராணுவத்தினரின் உதவி
“தூய இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 பெப்ரவரி 19 அன்று நல்லதண்ணியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமனலசிறி ஹரித வந்தனா’ தேசிய திட்டத்திற்கு இராணுவப் படையினர் உதவி வழங்கினர்.
பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு இராணுவ தளபதி பாராட்டு
9 வது பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் நாட்டிற்கு பெருமை சேர்த்து தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ அணி 2026 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தனர்.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
கூட்டு சேவைகள் மொழி பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் ஈ.என். குருகுலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 பெப்ரவரி 18, ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவ தளபதி இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 18 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
மஞ்சி தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப் - 2026 இல் இராணுவ வீரர்கள் வெற்றி
மஞ்சி தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப் – 2026 க்கான போட்டி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் 2026 பெப்ரவரி 17, அன்று நடைபெற்றது.
லியங்கஹவெல சுரங்கத்தில் மீட்பு நடவடிக்கைக்கு இராணுவத்தினர் உதவி
2026 பெப்ரவரி 14 ஆம் திகதி லியங்கஹவெல கல் குவாரியில் நடந்த ஒரு துயர விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.