லியங்கஹவெல சுரங்கத்தில் மீட்பு நடவடிக்கைக்கு இராணுவத்தினர் உதவி

2026 பெப்ரவரி 14 ஆம் திகதி லியங்கஹவெல கல் குவாரியில் நடந்த ஒரு துயர விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, இலங்கை இராணுவத்தின் 112 வது காலாட் பிரிகேடின் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தில் ஆபத்தான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இராணுவ வீரர்கள் விபத்துக்குள்ளானவர்களின் சடலங்களை மீட்டு, தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.