செய்தி சிறப்பம்சங்கள்
மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை
இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 ஜனவரி 04 ஆம் திகதி களனி, சேபால பொது மயானத்தில் நடைபெற்றது.
துருத்து பௌர்ணமி தினத்தன்று மத அனுஷ்டானங்களில் இராணுவத் தளபதி பங்குபற்றல்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தினால் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் 2026 ஜனவரி 03 அன்று துருத்து பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்வில் கலந்து கொண்டார்.
மறைந்த பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை
இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 ஜனவரி 02 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவம் அறிமுகம்படுத்தும் நடத்தை விதிகள்
இலங்கை இராணுவம் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி இராணுவ தலைமையக பல்லூடக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவ ஒழுக்க விதிகளின் மின்னணு பதிப்பை அறிமுகப்படுத்தியது. அனைத்து அணிகளிலும் நிறுவன ஒருமைப்பாடு, நெறிமுறை ஒழுக்கம் மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்கான இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக உள் விவகார பிரிவால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் எ.எம்.சீ.பீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஏ.பீ. விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 டிசம்பர் 29 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.கே.ஆர்.என் சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 29, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரியின் சிறந்த செயற்திறனுக்கு இராணுவ தளபதி கௌரவிப்பு
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பணிநிலை சார்ஜன் கே.எம்.சீ.எஸ். குலசேகர யூஎஸ்பீ அவர்கள் அணிநடை பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 134 இல் முதலிடத்தைப் பெற்றார்.
நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில், மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.எஸ். ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 டிசம்பர் 25 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடனான மரியாதைக்குறிய சந்திப்பின் போது அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
இராணுவத் தளபதி, மாற்றுத்திறனாளி போர் வீரர்களை சந்தித்து நத்தார் வாழ்த்து தெரிவிப்பு
நத்தார் பண்டிகை மற்றும் நல்லெண்ண உணர்வினை உணர்த்தும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 23 அன்று கம்புருபிட்டிய அபிமன்சல 2 நலவிடுதி, ராகம ரணவிரு சேவன மற்றும் அத்திட்டிய மிகிந்து செத் மெதுர நலவிடுதி ஆகிய இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.