செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு இராணுவத்தால் மடிக்கணினி நன்கொடை
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்திற்கிணங்க டிஜிட்டல் கற்றலுக்கான மேம்படுத்தப்பட்ட அணுகல் மூலம், இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் உயர்கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் 2026 மார்ச் 13 அன்று இராணுவத் தலைமையகத்தில் மடிக்கணினி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதி இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
இலங்கை இராணுவ வைத்திய படையின் 12வது குழு தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணி வைத்தியசாலை நிலை-2 ற்கு விஜயம்
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 12வது குழு 2026 மார்ச் 13 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு பட்டறை
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் இரண்டு நாள் தலைமைத்துவ மேம்பாட்டு பட்டறை 2026 மார்ச் 06 மற்றும் 07 ம் திகதிகளில் சீன-லங்கா நட்புறவு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள், பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தலைமைத்துவ தரநிலைகள், தொழில்முறை பொறுப்பு மற்றும் வழிகாட்டுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணியின் இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலையின் 11வது குழுவின் பணிகாலம் நிறைவு
தென் சூடான் போரில் ஐ.நா அமைதி காக்கும் பணியின் இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்றிய 11வது குழுவில் 10 அதிகாரிகள் மற்றும் 41 சிப்பாய்கள் உள்ளடங்குவர். அவர்கள் ஒரு வருட கால பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து 2026 மார்ச் 11 அன்று இலங்கைக்கு திரும்பினர். இதற்கிடையில், மீதமுள்ள 05 அதிகாரிகள் மற்றும் 04 சிப்பாய்கள் தென்சூடானில் பின்தளக் குழுவாக தென் சூடானிலேயே தங்கியுள்ளதுடன், அவர்கள் விரைவில் இலங்கைக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத் தளபதி விசேட இப்தார் நிகழ்வில் பங்குபற்றல்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 11 கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார். புனித ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு நோன்பதனை குறிக்கும் வகையில் இந்த விழா அமையப்பட்டது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.பீ. ஜயம்பதி யூஎஸ்பீ அவர்கள் 2026 மார்ச் 11ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை பொறியியல் படையணிகளுக்கிடையிலான தடகளப் போட்டி – 2026 இல் நிறைவு விழாவில் இராணுவ பதவி நிலைப் பிரதானி பங்கேற்பு
இலங்கை பொறியியல் படையணிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி – 2026, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் 2026 மார்ச் 08 ஆம் திகதி நடைபெற்றது. நிறைவு விழாவில் இராணுவத் பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி 12வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 3வது (தொ) கெமுனு ஹேவா படையணிக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் கம்புருபிட்டிய 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைகள் படையணி மற்றும் மாத்தறை 3 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிற்கு 2026 மார்ச் 06 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் வை.எச்.பீ. ரங்கஜீவ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 2026 மார்ச் 09 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
59 வது வருடாந்த இராணுவ வீதி ஓட்ட போட்டி நிறைவு
தொடர்ச்சியாக 59 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (2026 மார்ச் 08) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.