செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவப் படையணிகளுக்கு இடையிலான போர் துப்பாக்கி சூட்டு சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவு
2025 ஆம் ஆண்டுக்கான இராணுவப் படையணிகளுக்கு இடையிலான போர் துப்பாக்கி சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் சான்றிதழ் மற்றும் கிண்ணம் வழங்கும் நிகழ்வு 2025 டிசம்பர் 22 ஆம் திகதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
தியதலாவ அனைத்து நிலையினருக்குமான புதிய விடுமுறை விடுதியை இராணுவத் தளபதி திறந்து வைப்பு
இலங்கையில் மனிதாபிமான நிவாரணப் பணிக்காக பாகிஸ்தான் இராணுவ மீட்புக் குழுவிற்கு பாராட்டு
மேஜர் முகமது அப்துல் மன்னன் தலைமையிலான 47 பேர் கொண்ட பாகிஸ்தான் இராணுவ மீட்பு குழு மற்றும் நிவாரணப் படை, தித்வா சூறாவளி நிவாரணப் பணிகளின் போது சிறப்பான சேவை வழங்கியதற்காக இலங்கை இராணுவத்தால் முறையாகப் பாராட்டப்பட்டது.
இராணுவத் தளபதி இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரி மரியாதை நிகழ்வில் பங்குபற்றல்
இராணுவத் தளபதி இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் மதிப்புமிக்க சுவரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 20 அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
புனித மரியாள் தேவாலயத்தின் புனரமைப்புக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணி உதவி
நத்தார் தின கொண்டாட்டத்துடன் இணைந்து அவிசாவளை புனித மரியாள் தேவாலயத்தின் அருட் தந்தை டிரான் பெரேராவின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினர் வர்ணம் பூசுதல், நீர் தொட்டியை சரிசெய்தல் மற்றும் குழாய்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு உதவினர். புனரமைப்பு பணிகள் 2025 நவம்பர் 27 முதல் 2025 டிசம்பர் 18 வரை மேற்கொள்ளப்பட்டன.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில்,மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பீ. விக்ரமசேகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 18, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில்,மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்எஸ்சீ பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2025 டிசம்பர் 18, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
இராணுவ தளபதியினால் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி எண் – 20 மற்றும் வழங்கல் கட்டளை பாடநெறி – 12க்கு எழுதபொருட்கள் வழங்கல்
2025 டிசமபர் 17 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி எண் – 20 மற்றும் வழங்கல் கட்டளை பாடநெறி – 12 மாணவர்களுக்கு எழுதபொருட்கள் வழங்கலில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தில் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.பீ.ஐ.பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 17 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஏயர் டிராவல் சர்வீசஸ் (தனியார்) நிறுவன பணிப்பாளர்களின் குழு கூட்டம்
ஏயர் டிராவல் சர்வீசஸ் (தனியார்) நிறுவன பணிப்பாளர்களின் குழு கூட்டம் 2025 டிசம்பர் 15 அன்று போக்குவரத்து பணிப்பக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பணிப்பாளர் குழுவின் தலைவராக கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.