19th February 2026
9 வது பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் நாட்டிற்கு பெருமை சேர்த்து தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ அணி 2026 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தனர்.
சந்திப்பின் போது, வரலாற்றில் இரண்டாவது முறையாக போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று சிறந்த சாதனை படைத்த அணிக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நிகழ்வின் நிறைவில் வெற்றியாளர்களுக்கு பாராட்டு கடிதங்களையும், பாராட்டுச் சின்னங்களையும் இராணுவத் தளபதி வழங்கினார்.