18th February 2026
மஞ்சி தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப் – 2026 க்கான போட்டி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் 2026 பெப்ரவரி 17, அன்று நடைபெற்றது.
இப் போட்டியின் போது, இலங்கை இராணுவ கரப்பந்து அணி, இலங்கை துறைமுக அதிகாரசபை அணியை 03-01 என்ற விகிதத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
அணியின் வெற்றிக்கு சிறப்பான செயல்திறன் மற்றும் பெறுமதிப்புமிக்க பங்களிப்புகளுக்காக பின்வரும் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்:
சிறந்த வீரர் - இலங்கை சமிக்ஞை படையணியின் கோப்ரல் கே. கலைச்செல்வம் சிறந்த அறைதல் வீரர் - இலங்கை சமிக்ஞை படையணியின் கோப்ரல் கே. கலைச்செல்வம்
சிறந்த அமைப்பாளர் - இலங்கை சமிக்ஞை படையணியின் கோப்ரல் ஜி.பீ. துஷ்யந்த
சிறந்த லிபரோ (தற்காப்பு) - பொறியியல் சேவைகள் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ.டி.எம்.எஸ். விக்ரமசிங்க
சிறந்த வேக அறைதல் வீரர்கள் - கஜபா படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II பி.எச்.டபிள்யூ. லக்மல் மற்றும் இலங்கை கவசப் படையணியின் பணிநிலை சார்ஜன் ஏ.கே.ஜி.என்.எஸ். கருணாரத்ன
சிறந்த வெளிப்புற வீச்சாளர் (உயர் பந்து அறைதல்) - இலங்கை பீரங்கிப் படையணியின் லான்ஸ் பொம்படியர் பீ.எம்.எஸ். கெலும்ரத்ன