21st February 2026
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ 2026 பெப்ரவரி 20 அன்று பீரங்கி பயிற்சி பாடசாலைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்தார்.
வருகை தந்த இராணுவ தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். இராணுவ மரபுகளுக்கமைய பிரதான நுழைவாயிலில் இராணுவத் தளபதியின் வாகனதொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, புதுப்பிக்கப்பட்ட துப்பாக்கி இல்லத்தையும் அதிகாரவனையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தையும் இராணுவ தளபதி தளபதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். பின்னர், பீரங்கி பயிற்சி பாடசாலையில் புதிதாக நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர் திறந்து வைத்ததுடன் இது படையினருக்கான அத்தியாவசிய வசதிகளை மேலும் மேம்படுத்த உதவியது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.