‘சமனலசிறி ஹரித வந்தனா’ தேசிய திட்டத்திற்கு இராணுவத்தினரின் உதவி

“தூய இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 பெப்ரவரி 19 அன்று நல்லதண்ணியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமனலசிறி ஹரித வந்தனா’ தேசிய திட்டத்திற்கு இராணுவப் படையினர் உதவி வழங்கினர்.

இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கௌரவ (வைத்திய) தம்மிக்க பட்டபெந்தி அவர்கள் தூய இலங்கை திட்டத்தின் மேலதீக செயலாளர் திரு. எஸ்.பி.சி. சுகீஸ்வர அவர்களுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இத் திட்டத்தின் போது போது சுற்றுச்சூழலின் புனிதத்தைப் பாதுகாப்பதையும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதும் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும். பங்கேற்பாளர்கள் முறையான அகற்றல் மற்றும் பொது விழிப்புணர்வு வழிகாட்டுதலுடன் முக்கிய இடங்களில் சுத்தம் செய்தல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்டதுடன் அதே நேரத்தில் வீதி நாடகங்கள் ஊடாக யாத்ரீகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதை தொடர்ந்து சேகரிக்கப்பட்ட கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

தூய இலங்கை திட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் எம்.என். குணவர்தன பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.