19th February 2026
கூட்டு சேவைகள் மொழி பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் ஈ.என். குருகுலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 பெப்ரவரி 18, ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் ஈ.என். குருகுலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ 1991 ஜனவரி 02 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி 35 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1992 ஆகஸ்ட் 29 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மார்ச் 02 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் கூட்டு சேவைகள் மொழி பயிற்சி பாடசாலையின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். 4 வது கஜபா படையணியின் குழு தளபதி, இராணுவ கல்வியற்கல்லூரி அதிகாரி பயிற்றுவிப்பாளர், 4 வது கஜபா படையணி நிறைவேற்று அதிகாரி, 4 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, மறைந்த மேஜர் ஜெனரல் டப்ளியூ.ஏ.டி.ஜீ.ஏ குணசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு உதவியாளர், 4 வது கஜபா படையணி செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, போர் பயிற்சி பாடசாலை பணிநிலை அதிகாரி 3 (நிர்வாகம்), காலாட் பயிற்சி நிலைய படையலகு பயிற்சி பாடசாலை பயிற்றுவிப்பாளர், 8 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, காலாட்படை பணிப்பக பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப்பணி நிலை அதிகாரி 2 (நிர்வாகம்) மற்றும் 9 வது வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி போன்றவை ஆகும்.
அவர் ஹைட்டி ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்படுத்தல் பணியின் இலங்கை படையலகின் பணிநிலை அதிகாரி, 12 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 11 வது காலாட் படைப்பிரிவு தலைமைகத்தின் பணிநிலை அதிகாரி 1 (ஒருகிணைப்பு), 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவப் பயிற்சிப் பாடசலை பயிற்சி பிரிவின் கட்டளை அதிகாரி, 11 வது காலாட் படைப்பிரிவு தலைமைகத்தின் பணிநிலை அதிகாரி 1(நிர்வாகம் மற்றும் விடுதி), கூட்டு சேவைகள் மொழி பயிற்சி பாடசாலை தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் பிரதி தளபதி, மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் திட்ட அதிகாரியாகவும் இறுதியாக, கூட்டு சேவைகள் மொழிப் பயிற்சிப் பாடசாலையின் தளபதியாகவும் பணியாற்றுகின்றார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண விக்ரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி பல தொழில்முறை இராணுவ பட்ட படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன் அதில், போர் வான் தாக்குதல் செயல்பாட்டு பயிற்சி பாடநெறி, படையலகு கணக்கியல் அதிகாரிகள் பாடநெறி, அணி கட்டளை தளபதி பாடநெறி, படையலகு உதவி ஆயுத அதிகாரிகள் பாடநெறி, மனித உரிமைகள் சட்டப் பாடநெறி, ஆயுத மோதல் சட்டம் அதிகாரி பயிற்றுனர்கள் பயிற்சி பாடநெறி, அதிகாரி பயிற்றுனர்களுக்கான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் மேம்பட்ட புத்தாக்கப் பயிற்சி பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி மற்றும் உலகளாவிய தகவல் அமைப்பு (GIS) பாடநெறி ஆகியவற்றை பயின்றுள்ளார்.
அவர் இளம் அதிகாரிகள் பயிற்சி பாடநெறி - இந்தியா, கனிஷ்ட கட்டளை பயிற்சி பாடநெறி - இந்தியா மற்றும் அடிப்படை பரசூட் பயிற்சி பாடநெறி - இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு பயிற்சி பாடநெறிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
இராணுவ பாடநெறிகளுக்கு மேலதிகமாக, சிரேஷ்ட அதிகாரி இந்தியாவின் இந்தூரில் உள்ள அரச தன்னாட்சி ஹோல்கர் அறிவியல் கல்லூரியில் கணினி முறைமைகள் மற்றும் பயன்பாடுகளில் டிப்ளோமாவையும், இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் அனர்த்த முகாமைத்துவ டிப்ளோமாவையும் பயின்றுள்ளார்.