செய்தி சிறப்பம்சங்கள்
எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் இராணுவத் தளபதி பங்குபற்றல்
ஸ்ரீ போதிராஜ கல்லூரி மற்றும் போதிராஜ அறக்கட்டளையை நிறுவிய அதி வண. ஓமல்பே சோபித தேரரின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
Major General D.K.S.K. Dolage USP nps psc, the outgoing Chief of Staff of the Sri Lanka Army and Colonel Commandant of the Corps of Sri Lanka Engineers, was invited to the office of the Commander of the Army, Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, on 30 March 2026, prior to his retirement from the Sri Lanka Army after a distinguished military career spanning over 36 years.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.டி.அதிகாரி யூஎஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் கே.ஏ. புஸ்பகுமார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோர், 2026 மார்ச் 26, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 25 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எல்.டப்ளியூ.எஸ்.ஆர். வெத்தசிங்க அவர்கள் 2026 மார்ச் 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
இராணுவத் தளபதியினால் பணியில் இருக்கும் படைவீரருக்கு புதிய இல்லம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் 21 மார்ச் 2026 அன்று, புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பணியில் உள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் எஸ்.ஜே காரியகரவன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.டி.யூ. கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2026 மார்ச் 23ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
விசேட படையணியின் அடிப்படைப் பாடநெறி எண் 57 விடுகை அணிவகுப்பு மாதுரு ஓயாவில் நடைபெற்றது
விசேட படையணியின் அடிப்படைப் பாடநெறி எண் – 57 இன் விடுகை நிகழ்வானது 2026 மார்ச் 20 அன்று மாதுரு ஓயா விசேட படையணி பயிற்சி பாடசாலையில் நிறைவு பெற்றது. இப் பாடநெறியில் 5 அதிகாரிகள் மற்றும் 59 சிப்பாய்கள் தீவிர ஒன்பது மாத அடிப்படைப் பயிற்சியினை பெற்றனர்.
உலக முடிவில் இருந்து தவறி விழுந்த பல்கலைகழக மாணவரை இராணுவத்தினர் மீட்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், ஹோர்டன் சமவெளிப் பகுதியில் உள்ள ‘உலக முடிவு’ என்ற இடத்திலிருந்து தவறி விழுந்தது குறித்து நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகரிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவ படையினர் 2026 மார்ச் 19 அன்று உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.