இராணுவ தளபதி இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 18 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். இராணுவ மரபுகளுக்கமைய பிரதான நுழைவாயிலில் இராணுவ தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி பாதையையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தங்குமிட வளாகத்தையும் (லேக் வியூ) அவர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். பின்னர், தளபதி ஒரு குழு படம் எடுத்து கொண்டதுடன் வளாகத்தில் ஒரு மரக் கன்றையும் நாட்டினார். அதன் பிறகு, இராணுவத் தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்து கொண்டு படையினருடன் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, இராணுவத் தளபதியின் வருகையைப் பாராட்டி, தொண்டர் படையணி தளபதி ஒரு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கியதுடன் மேலும் இராணுவ தளபதியும் நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். தொடர்ந்து இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்து கள விஜயம் மேற்கொண்டார்.

விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிடலுடன் விஜயம் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.