இராணுவ படையினரால் வஹல்கடா குளத்தின் உடைந்த கால்வாய் மீளமைப்பு
27th November 2024
27 நவம்பர் 2024 அன்று பெய்த கனமழையால் அனுராதபுரத்தில் உள்ள வாஹல்கடா குளத்தின் டி-4 கால்வாய் கட்டு இடிந்து வீழ்ந்ததன் காரணமாக வஹல்கடா டி-4 கிராம மக்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ வழிகாட்டலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 211 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 9 வது கஜபா படையணி, 5 வது (தொ) கஜபா படையணி படையினர் மற்றும் கிராம மக்கள் நெருக்கடியைத் தணிக்கப் பணியாற்றினர். அவர்கள் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி கால்வாய் கட்டை சரிசெய்து, மேலும் நீர் கசிவைத் தடுத்து மக்களை பாதுகாத்தனர்.