2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியினரால் துலான ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் விழுந்த மரம் அகற்றல்
18th December 2024
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ரம்பேவ, துலானா ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் அரச மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், விகாரை வளாகத்தின் கட்டிடம் ஒன்றுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. ரம்பேவ பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் 17 டிசம்பர் 2024 அன்று விழுந்த மரத்தை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தினர்.
இந்த திட்டம் 213 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.