3 வது (தொ) இலங்கை சிங்க படையணியினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

18th December 2024

ஹங்குரன்கெத்த, மந்தாரம் நுவர பகுதியில் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் பிரதேச அனுசரனையாளர்களின் அனுசரணையுடன் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டது.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டு சாவியை பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக 17 டிசம்பர் 2024 அன்று கையளித்தார்.

நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.