குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம்

6th November 2024

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் பாடசலை மற்றும் சுற்றியுள்ள சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை நோக்கமாக கொண்டு வெற்றிகரமாக நீர் சுத்திகரிக்கும் இயந்திர மட்/கல் குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது.

2024 நவம்பர் 03 ஆம் திகதி அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றதுடன், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். திருமதி திலினி ராமநாயக்க அவர்கள் தனது மறைந்த தந்தையான திரு.சரத் ராமநாயக்க அவர்களின் 10வது நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய ஒரு மில்லியன் ரூபா நிதியுதவியில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.