இந்திய படையினர் கவுடுல்ல தேசிய பூங்கா மற்றும் காயங்கர்னி கடற்கரைக்கு விஜயம்
21st August 2024
மித்ரா சக்தி இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுள்ள இந்தியப் படையினர் அண்மையில் கவுடுல்ல தேசியப் பூங்கா மற்றும் காயங்கர்னி கடற்கரைக்கு விஜயம் செய்தனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள கவுடுல்ல தேசியப் பூங்கா, வளமான பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும், குறிப்பாக பெரும் காட்டு யானைகளுக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா இடமாகும். குறிப்பிடத்தக்க த் தலமாக அமைகிறது. பிரமிக்க வைக்கும் கடற்கரைக்கு பெயர் பெற்ற இரம்மியமான காயங்கர்னி கடற்கரையில் பவளப்பாறைகளை ஆராயவும், கடற்கரை விளையாட்டுகளில் ஈடுபடவும் இந்தியப் படையினருக்கு வாய்ப்பு கிடைத்தது. 'மித்ரசக்தி' பயிற்சியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.