இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியினால் மைதான வசதிகளுக்கு அடிக்கல் நாட்டல்
25th August 2024
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்களினால் 19 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் உள்ள "ரெண்டெஸ்வஸ் மைதானத்தில்" புதிய அரங்குக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான மைதானத்தை மேலும் மேம்படுத்துவதில் இந்த விழா குறிப்பிடத்தக்க படியாக அமைந்தது. இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் மத சடங்குகள் மற்றும் பாராயணங்களுக்கு மத்தியில் முதல் மண் கட்டியை வெட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதிய அரங்கில் 200 பேர் அமரும் வசதி கொண்ட இரட்டை உயர வடிவமைப்பு மற்றும் கிரிக்கெட் தரத்தை பூர்த்தி செய்ய கூடுதல் வசதிகள் இருக்கும்.
4 வது (தொ) இலங்கை பொறியியல் படையணி, 1 வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் மனிதவள ஆதரவுடன் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு வடிவமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த நிர்மாணம் மேற்கொள்ளப்படும். இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் சிசிர குமார ஆர்எஸ்பீ இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவார்.
இந்த விழாவில் தொண்டர் படை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.