18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் சிரமதான பணி

26th August 2024

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் 2024 ஆகஸ்ட் 22 அன்று கும்புக்கன கங்காராம விகாரை மற்றும் மொனராகலை மாதுருகெட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

121 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 18 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினரின் பாராட்டத்தக்க முயற்சிகளுக்கு விகாரையின் தலைமை விகாராதிபதியும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினரும் தங்களது பாராட்டினை தெரிவித்துக்கொண்டனர்.