விளையாட்டு

இலங்கை கடற்படை நடாத்திய 13 வது பாதுகாப்பு சேவைகள் காற்பந்து போட்டியின் இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 11 அன்று வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது.


2025 ஏப்ரல் 09 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில், இராணுவ விளையாட்டு கழகம், கடற்படை விளையாட்டு கழகம், விமானபடை விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் பங்கேற்ற தொடர்ச்சியான கடுமையான போட்டிகளுக்குப் பின்னர் இலங்கை இராணுவ ஆண்கள் ரக்பி அணி வெற்றி பெற்றது.


இராணுவ காற்பந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 படையணிகளுக்கிடையிலான ஆண்கள் செபக்டக்ரா சாம்பியன்ஷிப் போட்டி 2025 மார்ச் 07 ஆம் திகதி பனாகொடை உள்ளக மைதானத்தில் 13 படையணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது. 13 படையணிகளின் அணிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான போட்டியின் பின்னர், விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி மற்றும் இலங்கை இராணுவ இராணுவ பொலிஸ் படையணியின் செபக்டக்ரா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி 02 க்கு 00 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது.


இலங்கை இராணுவ தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் வீதி ஓட்ட போட்டி - 2024/2025, இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ பீஎஸ்சீ எச்டிஎம்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், பனாகொடை இராணுவ முகாமில் 2025 மார்ச் 23, அன்று நிறைவடைந்தது.


13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் தியவன்னா படகோட்ட மையத்தில் இலங்கை இராணுவ படகோட்டக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்தியா புதுதில்லியில் 2025 மார்ச் 12 அன்று நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டியில், உலகெங்கிலும் உள்ள சிறந்த பரா-தடகள வீரர்கள் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்க ஒன்றிணைந்தனர்.


தேசிய தடகள தேர்வுப் போட்டி - 2025, தியகம மைதானத்தில் 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றது.


இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2025 இல் இலங்கை இராணுவம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறந்த ஆண்கள் சாம்பியன்ஷிப் உட்பட பல வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தப் போட்டி 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 02 வரை நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இப் போட்டியில் நாடுமுழுவதிலிருந்தும் 160 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


இலங்கை தேசிய செபக்டக்ரா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டு தேசிய கடற்கரை செபக்டக்ரா சாம்பியன்ஷி போட்டி 2025 ஜனவரி 19 அன்று கல்கிசை கடற்கரையில் நிறைவடைந்தது. இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் செபக்டக்ரா அணிகள் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்றன.