சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் 2025 இல் இராணுவ கடற்கரை கரப்பந்து வீரர்கள் வெற்றி

சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2025 இல் இலங்கை இராணுவம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறந்த ஆண்கள் சாம்பியன்ஷிப் உட்பட பல வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தப் போட்டி 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 02 வரை நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இப் போட்டியில் நாடுமுழுவதிலிருந்தும் 160 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

சிறந்த திறமை மற்றும் குழு ஒற்றுமையை வெளிப்படுத்திய இராணுவ 'பி' அணி, ஆண்கள் திறந்த இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படை அணியை 2 - 0 (21 - 15, 21 - 16) என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு அணிகள் போட்டியில் போட்டியிட்டு, பல்வேறு பிரிவுகளில் வெற்றிகளைப் பெற்றன:

ஆண்கள் திறந்த பிரிவு

சாம்பியன்கள் - இராணுவ பி அணி

2 ஆம் இடம் - இராணுவ ஏ அணி

3 ஆம் இடம் - இராணுவ சி அணி

25 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

2 ஆம் இடம் - இராணுவ ஏ அணி