13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டியின் படகோட்ட சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் வரலாற்று வெற்றி

13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் தியவன்னா படகோட்ட மையத்தில் இலங்கை இராணுவ படகோட்டக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை இராணுவ படகோட்டக் குழு ஏழு தங்கப் பதக்கங்களை பெற்றதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் இரண்டிலும் வெற்றி பெற்றது. ஆண்கள் அணி நான்கு தங்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களைப் பெற்றதுடன் பெண்கள் அணி மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கி கொண்டன.

இராணுவ படகோட்டக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.