குருநாகல், பாங்கொல்ல அபிமன்சல-3 மற்றும் அனுராதபுரம் அபிமன்சல-1 ஆகிய மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள் கடந்த ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி மற்றும், மாற்றுத்திறனாளி போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.