பட விவரணம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தனது உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.


உலக சுற்றாடல் தினத்தைக் குறிக்கும் வகையில், தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஜூன் 05, அன்று இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டது. அதன்படி, 2025 மே 30 முதல் ஜூன் 05, வரையிலான வாரம் சுற்றாடல் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.


16 வது தேசிய போர்வீரர் தின நினைவு நிகழ்வு, 2025 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை தேசிய போர்வீரர் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


16 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2025 மே 19 அன்று அத்திட்டிய ‘மிஹிந்து செத் மெதுர’ நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.


2569 புத்த வருடத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா மே 10 ஆம் திகதி நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் மூன்று மஹா நாயக்க தேரர்களின் தலைமையில் ஆரம்பமானது.


16வது தேசிய போர் வீரர்கள் தினத்தை (வெற்றி நாள்) பெருமையுடன் கொண்டாடுவோம்! இராணுவத் தளபதியின் செய்தி இங்கே:


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் புத்தரின் பிறப்பு, ஞானம் பரிநிர்வாணம் மூன்றும் நிகழ்ந்த தினமான விசாக பெளர்ணமியில் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆன்மிகம் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் இன்று (09) நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது ஏற்பட்ட வானுார்தி விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலன் விசாரிக்க பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு இன்று (09) விஜயம் மேற்கொண்டார்.


இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நகதானி ஜென் அவர்கள் சனிக்கிழமை (மே 03) இலங்கைக்கு வருகை தந்தார்.


கொரியக் குடியரசு கடற்படையின் போர்க் கப்பலான ‘காங் காம் சான்’ இன்று (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதற்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இக் கப்பல் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.