5th November 2025
தேசிய பாதுகாப்பு கல்லூரியால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, 2025 நவம்பர் 05, அன்று "தேசிய பாதுகாப்பில் இலங்கை இராணுவத்தின் பங்கு" என்ற கருப்பொருளில் தளபதியின் சொற்பொழிவை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.
இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டு சூழல், மூலோபாய மாற்றம் மற்றும் எதிர்கால தயார்நிலை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை இந்த விரிவுரை வழங்கியது. தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை நோக்கங்களுடன் இணைந்த ஒரு தொழிற்துறை, தகவலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் படையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள், தொடர்ச்சியான நவீனமயமாக்கல் முயற்சிகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு குறித்து தெளிவாக இதன் போது கூறினார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி எண் 04-2025 ஐத் தொடர்ந்து வரும் மாணவர் அதிகாரிகளுக்கான இவ் விரிவுரையை தேசிய பாதுகாப்பு கல்லூரி நடாத்தியதுடன் இதில் இராணுவத்திலிருந்து 15 அதிகாரிகள், கடற்படையிலிருந்து 07 பேர், விமானப்படையிலிருந்து 06 பேர், காவல்துறையின் 03 பேர் மற்றும் 10 வெளிநாட்டு அதிகாரிகள் அடங்குவர்.
வருகை தந்த இராணுவ தளபதியை தேசிய பாதுகாப்பு கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ். முனசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ எம்எஸ்சீ (என்எஸ்&எஸ்எஸ்) அவர்கள் இராணுவத் தளபதியை வரவேற்றதுடன் தேசிய பாதுகாப்பு கல்லூரி செயலாளர் பிரிகேடியர் கே.எம்.ஜி. பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அன்றைய விரிவுரையாளருக்கான அறிமுக உரையை வழங்கினார்.