16th November 2025
81 வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கம் ஆயுதப்படைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வருடாந்த நிகழ்வு, முதலாம் உலகப் போர் முதல் இன்று வரையிலான யுத்தங்களில் தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை போர் வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.
இலங்கைப் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இறுதி தியாகத்தைச் செய்தவர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்திக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தும் வகையில், மலர்வளையம் வைத்தல், மௌன அஞ்சலி மற்றும் இராணுவ மரியாதைகள் போன்றன இந்த நிகழ்வில் இடம்பெற்றன.
கடற்படைத் தளபதி, பாதுகாப்பு ஆலோசகர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் சிப்பாய்கள், போர் வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(புகைப்படம் உபயம்: பாதுகாப்பு அமைச்சு)