இராணுவத் தலைமையகத்தில் ‘அவசன் சடனே மியகிய அவசன் செபலா’ புத்தக வெளியீட்டு விழா

லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்க அவர்கள் எழுதிய ‘அவசன் சடனே மியகிய அவசன் செபலா’ (இறுதிப் போரில் வீழ்ந்த இறுதி சிப்பாய்) புத்தக வெளியீட்டு விழா 2025 ஜூலை 08 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.