சிவில் பணிகள்
55 வது காலாட் படைப்பிரிவு படையினரால் கிளிநொச்சியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நன்கொடை
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.ஜி.இ. ஹேரத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீசஎஸ்ச அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.பி.எம்.ஆர். கந்தேகும்புர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் 22 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கும் சமூக நலத்திட்டம் நடாத்தப்பட்டது.
இராணுவத்தினரால் வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நலன்புரித் திட்டம் முன்னெடுப்பு
நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து, வவுனியாவில் உள்ள 137 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய குழந்தை பராமரிப்புப் பொருட்களை வழங்கும் நலன்புரி திட்டத்தை 2026 பெப்ரவரி 13 அன்று காமினி மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
முல்லைத்தீவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உதவி
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர் முல்லைத்தீவு பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய மகப்பேறு பொருட்களை 2026 பெப்ரவரி 14 அன்று வழங்கினர்.
சுப்ரீம் கெயா ஜன சுவ யாத்ரா மருத்துவ முகாமிற்கு இராணுவ படையினர் உதவி
சுப்ரீம் கெயா ஜன சுவ யாத்ரா சமூக நலத் திட்டத்தின் கீழ் ஒரு கண் சிகிச்சை மற்றும் சுகாதார மருத்துவ முகாம் 2026 பெப்ரவரி 14 அன்று 61 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள ஸ்ரீ வர்தனாராமய விகாரையில் நடத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி 55 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுடன் 150க்கும் மேற்பட்ட முதியோர் இதில் பங்குபற்றினர்.
இராணுவத்தினரால் மன்னாரில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு
54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 4 வது விஜயபாகு காலாட் படையணி படையினருடன் இணைந்து 2026 பெப்ரவரி 15 அன்று மன்னாரில் உள்ள மறைமாவட்ட பொது மக்கள் மன்ற விரிவுரை மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி 162 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவிகளை வழங்கினர்.
இராணுவ படையினரால் இரத்த தான நிகழ்வு
பொறியியல் சேவைகள் படையணியின் அதிகாரி கட்டளை படையின் (முல்லைத்தீவு) 2 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 பெப்ரவரி 10 அன்று முகாம் வளாகத்தில் இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மத யாத்திரையின் போது பக்தர்களுக்கு உதவிய படையினர்
புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலிருந்து மன்னாரில் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு சிவலிங்கத்துடனான யாத்திரையின் பக்தர்களுக்கு 11 வது (தொ) கஜபா படையணி படையினர் 2026 பெப்ரவரி 12 அன்று கிளிநொச்சி, அக்கராயனில் உதவி வழங்கினர்.
இலங்கை இராணுவ சிவில் நிர்வாக பணிப்பகத்தால் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்ச்சி
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ சிவில் நிர்வாக பணிப்பகம் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி பேலியகொடையில் இரத்த தான நிகழ்ச்சியை நடாத்தியது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கற்றல் உதவிகள்
562 மற்றும் 563 வது காலாட் பிரிகேட் படையினர், ஸ்பிரிட் ஒப் கிவிங் அமைப்புடன் இணைந்து தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடை வழங்கும் திட்டம் 2026 பெப்ரவரி 05, அன்று வவுனியா ராஜேந்திரகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் வவுனியா மகாகச்சகுடிய அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் முன்னெடுத்தனர்.
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் இரத்த தானம்
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் இரத்தமாற்ற மையத்தில், கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வட மாகாண மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஒத்துழைப்புடன், 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2026 பெப்ரவரி 04 அன்று இரத்த தான நிகழ்ச்சியினை நடத்தினர்.