இராணுவத்தினரால் வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நலன்புரித் திட்டம் முன்னெடுப்பு

நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து, வவுனியாவில் உள்ள 137 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய குழந்தை பராமரிப்புப் பொருட்களை வழங்கும் நலன்புரி திட்டத்தை 2026 பெப்ரவரி 13 அன்று காமினி மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் 563 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ. தசநாயக்க ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அரச அதிகாரிகள், நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.