சிவில் பணிகள்
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு
78 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்த தேவையை ஆதரிப்பதற்காக 521 வது காலாட் பிரிகேட் 2026 பெப்ரவரி 06 ஆம் திகதி இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளிற்கமைய, 52 வது காலாட் படைப்பிரிவின் அறிவுறுத்தலில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவத்தினரால் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிரமதான பணி
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் 2026 பெப்ரவரி 03 ஆம் திகதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு
78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக 51வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2026 பெப்ரவரி 04 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு, 51வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
கம்புருபிட்டிய அபிமன்சல 2 நல விடுதியிலுள்ளவர்களுக்கு தர்ம பிரசங்க நிகழ்ச்சி
அபிமன்சல 2 நல விடுதியின் தளபதி பிரிகேடியர் ஜீ.ஜீ.ஆர். மத்துகொட யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கம்புருபிட்டிய அபிமன்சல 2 நல விடுதியின் பல்நோக்கு மண்டபத்தில் 2026 ஜனவரி 18 ஆம் திகதி ஒரு தர்ம பிரசங்கம் நடாத்தப்பட்டது.
இராணுவத்தினரால் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் கல்லூரிக்கு இரண்டு மாடி கட்டிடம் நிர்மாணிப்பு
யாழ்ப்பாணம், அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் கல்லூரியின் மாணவர்களுக்காக 51 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 5 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் 2026 ஜனவரி 30 ஆம் திகதி இரண்டு மாடி கட்டிடத்தை நிர்மாணித்து ஒப்படைத்தனர்.
மடுவில் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்
மடு மற்றும் தேக்கத்தில் தீத்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 53 குடும்பங்களுக்கு உதவி வழங்கும் வகையில் உலர் உணவு மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 2026 ஜனவரி 28 அன்று தேக்கம் கிராம சேவகர் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
புல்மோட்டையில் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை பைகள் வழங்கல்
தேர்ந்தெடுக்கப்பட்ட 200 ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் மற்றும் 100 பாடசாலை பைகளை விநியோகிக்கும் திட்டம் 22 வது காலாட் படைப்பிரிவால் 2026 ஜனவரி 19 அன்று புல்மோட்டை அர்பாத் முஸ்லிம் பாடசாலையில் நடத்தப்பட்டது.
அம்/மாஹ உனுவத்துர புபுல வித்தியாலய மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கல்வி உதவி
மஹா ஓயா கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் அம்/ மஹா உனுவத்துர புபுல வித்தியாலய மாணவர்களுக்காக, பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் பாடசாலைப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 17 அன்று பாடசாலை வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டம், ஆரம்ப வகுப்புகள் முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இராணுவத்தினரால் நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுப்பு
“தூய நகரம் - ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கமைய, 2026 ஜனவரி 07 முதல் 09 வரை 56 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்தில், சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் வழிகாட்டுதல் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் எழுதுபொருட்கள் விநியோகம்
அண்மையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் 2026 ஜனவரி 09 ஆம் திகதி நடாத்தப்பட்டது. கடுவெல ரனால மாதிரி ஆரம்ப பாடாசலையின் அனைத்து மாணவர்களுக்கும் 425 பாடசாலை பைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.