இராணுவத்தினரால் மன்னாரில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு

54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 4 வது விஜயபாகு காலாட் படையணி படையினருடன் இணைந்து 2026 பெப்ரவரி 15 அன்று மன்னாரில் உள்ள மறைமாவட்ட பொது மக்கள் மன்ற விரிவுரை மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி 162 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவிகளை வழங்கினர்.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நலத்திட்ட முயற்சிக்கு நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் தனியார் நிறுவனம் நிதியுதவி அளித்தது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், வட மாகாணத்திற்கான சிரேஷ்ட விற்பனை முகாமையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.